ஆதிசேஷன் மலையாய் உருவெடுத்த
ராகம்: புன்னாக வராளி
ஆதிசேஷன் மலையாய் உருவெடுத்த
திருவேங்கடம் தன்னை நாடி வந்தேன்
பாம்பணை அகன்று வந்து திருமலையில்
உன்னை நின்ற திருக்கோலத்தில் சேவிக்க ஆசையுடன் ... ( ஆதிசேஷன் )
காளிங்க நர்த்தனம் புரிந்தவனே .. அன்று
காளிங்க நர்த்தனம் புரிந்தவனே
நாகபத்னி துதிக்கிணங்க உயிர் தந்தவனே .. அவனுக்கு
நாகபத்னி துதிக்கிணங்க உயிர் தந்தவனே
ஆநிரை மேய்த்த என் கண்ணனே
குன்று குடையாய் எடுத்து நின்றவனே ... ( ஆதிசேஷன் )
நீதி நிலைத்திட பிறந்தவனே
கீதையை உலகுக்கு தந்தவனே ..
பகவத் கீதையை உலகுக்கு தந்தவனே
கார்முகில் வண்ணனே வேங்கடவா
உன்னை நின்ற கோலத்தில் சேவிக்க ஆசையுடன் ... ( ஆதிசேஷன் )
Click Here for AUDIO (under construction)