அன்றே உணர்ந்தேன் உன் பெருமை தன்னை

ராகம்: கேதாரகொள

அன்றே உணர்ந்தேன் உன் பெருமை தன்னை

ஆனலும் கால்ம் கடத்தினேன் உன் திருவடி சார

இப்போது அடைந்திட்டேன் திருவேங்கடம் தன்னை

ஈரடியால் உலகளந்த திருவடிகளைப் பற்ற

 

ராகம்: சஹானா

உலகுக்கு நான்மறைகள் மீட்டிய வித்தக பொருளே

ஊரேது பேசினாலும் சார்ந்திருப்பேன் உன் பாதகமலம் பற்றி

எந்தையே நினைந்திருப்பேன் உன்னோடு சேரும் காலம் தன்னை

ஏழேழ் பிறவிக்கும் உனக்கே நான் ஆட்செய்வேன்

 

ராகம்: தன்யாசி

ஐந்நாகப் பாம்பணை பள்ளி கொண்ட எம்பிரானே

ஒவ்வொரு நாளும் உன்னை காணாமல் கழிக்கும் காலம்

ஓர் யுகமாய் சென்றிடுதே பாவி நான் என் செய்வேன்

ஔடதமே நீ என வேண்டினேன் போகட்டும் அடியேனின் பல்வினைகள் யாவும்

 

ராகம்: ஹம்சாநந்தி

உயிரெழுத்தால் தொடங்கிய இவ்வரிகளை படிப்ப்வர்களின் கேட்பவர்களின்

உயிரிலே கலந்து நன்மைகளே செய்திடுவான் என் வேங்கடவன்

உலகுக்கே கீதாசார்யனாய் தோன்றி அவன் காட்டிய திருவடிகளை

சரணமென்று அடைந்தால் அடியார்கள் பிறவிப் பயன் அடைவரே

சரணம்  ...  சரணம்  ... சரணம்

 

Song rendered by me (forgive my gruffy voice!)

Top

Songs Index