அணு அணுவாகி
ராகம்: சிந்து பைரவி
அணு அணுவாகி ஆதாரமுமாகி
இகபர சுகம் தன்னை தருவோனே
ஈதென்ன வாயில் எனக் கேட்ட தாய்க்கு
உலகத்தை காட்டிய மாயோனே
ஊமையாய் மனதில் இருந்த எனக்கு
எழுத்தறிவு தந்த திருமாலே
ஏழேழ் பிறவிக்கும் உனக்கே ஆட்செய்ய
ஒவ்வொரு கணமும் உன்னை நினைவேனே
ஓம் நமோ நாராயணாய மந்திரத்தை
ஔடதம் என நினந்து துதிப்பேனே
உலகமே துதிக்கும் உன் புகழ் பாடினேன்
மனமுவந்து வந்தருள்வாயே