ஆராவமுதே சாரங்கபாணி

ராகம்: சாரங்கா

ஆராவமுதே சாரங்கபாணி

காணத் திகட்டாத சாரங்கா ... ( ஆராவமுதே )

 

நல்லவரை காக்க அவதாரம் பல எடுத்தாய்

மறைந்த தமிழ் மறையை உலகுக்கு தந்தாய்

ஸ்ரீதேவியை மணக்க தேரில் அவனி வந்தாய்

கருணை வெள்ளம் பொங்க அடியோரை நோக்கிடும் ... ( ஆராவமுதே )

 

திருமலையில் நின்றிடும் ஸ்ரீனிவாசன் நீயே

குடந்தை நகரில் அயர்ந்தவன் நீயே

திருமழிசையாழ்வார் வந்திடும் வேளையில்

எழுந்திடும் நிலையில் சேவை சாதிக்க

 

ஆழ்வார் அழைத்த ஆராவமுதே

காணத் திகட்டாத சாரங்கா  ... ( ஆராவமுதே )

 

Click Here for AUDIO (under construction)

Top

Songs Index