அருள் புரிவாய் திருவேங்கடவா
ராகம்: ரஞ்சனி
அருள் புரிவாய் திருவேங்கடவா
இந்த பாமாலையை உனக்கு பூமாலையாய் சூட்ட ... ( அருள் )
நல் சாதி மலரால் தொடுத்த மாலை போல்
இனிய தமிழ் சொல்லால் கோத்த மாலை சூட்ட ... ( அருள் )
செக்கச் சிவந்த ரோசாப் பூக்களும்
மலர்களில் சிறந்த மல்லிகைப் பூக்களும்
நறுமணம் கமழும் மருவாட்சி இதழும்
சேர்ந்து அமைந்த இப்பாமாலையைச் சூட்ட ... ( அருள் )