என்ன தவம் செய்து

ராகம்: பேஹாக்

என்ன தவம் செய்து மானிட பிறவி எடுத்து

உன்னை சேவிக்கும் பேற்றினை அடைந்தேனோ

கோவிந்தா என்ன தவம் செய்து மானிட பிறவி எடுத்து

உன்னை சேவிக்கும் பேற்றினை அடைந்தேனோ

அடியேன் என்ன தவம் செய்து மானிட பிறவி எடுத்து

உன்னை சேவிக்கும் பேற்றினை அடைந்தேனோ

 

உன்னையே நினைந்து என் மனக்கோவினுள் நிறுத்தி

உனக்கே ஆட்செய்ய என்ன தவம் செய்தேனோ

 

அலர்மேல் மங்கையுறை மணிமார்பனே

குளிர்மேகம் சூழ் திருவேங்கடம் தன்னில்

அபய கரத்தால் உன் திருவடி காட்டி நின்ற

கோலத்தில் உன்னை என் மனக்கோவினுள் நிறுத்தி ... ( என்ன )

 

சங்கொடு சக்கரம் பொருந்திய தோள்களும்

ஸர்வாலங்காரனாய் புன்முகத் திருக்கோலமும்

உன்னை காண்பவர் எவரையும் கவர்ந்திழுக்கும் அழகும்

அத்திருமேனியை என் மனக்கோவினுள் நிறுத்தி ... ( என்ன )

 

Click Here for AUDIO (under construction)

Top

Songs Index