குணதிசையில் திருமுடியும்

ராகம்: ஹம்ஸாநந்தி

குணதிசையில் திருமுடியும் குடதிசையில் திருவடியும்

தென் நோக்கி திருமுகமும்

இலங்கையை பார்த்திருப்பேன் என்றவனே

ரங்கனே உன்னழகில் உளம் கனிந்தேன்

ரங்கனே உன்னழகில் மயங்கினினேன்

 

கூப்பிட்ட குரலுக்கு கருடவாகனத்தில் வந்து

அரியின் ஆருயிர் காத்தவனே

கஜவரதா சங்குசக்ர கதாதரனாய்

காஞ்சியில் என்னை ஈர்த்தவனே

தேவராஜனே உன்னழகில் மயங்கினினே

 

மலர்மகள் மணாளனே கலியுகவரதனே

அபயகரத்தால் திருவடி காட்டி நின்ற

திருமலையில் உன்னை சரண் அடைந்தேனே

உன் ஆனந்த புன்சிரிப்பில் என்னை இழந்தேன்

ஸ்ரீனிவாசனே உன்னழகில் நான் மயங்கினினே

 

ரங்கனே உனனழகில் மயங்கினினே

தேவராஜனே உன்னழகில் மயங்கினினே

ஸ்ரீனிவாசனே உன்னழகில் மயங்கினினே

 

Click Here for AUDIO (under construction)

Top

Songs Index