ஹே கோவிந்தா
ராகம்: தர்பாரி கர்னாடகா
ஹே கோவிந்தா தீனரக்ஷகா
தஞ்சமென்றடைந்தேன் அபயமளிப்பாய்
கருணைக்கடலே கலியுக வரதா
காலமெல்லாம் நினைந்தேன் கண் திறவாயோ
லோகமாதா அலர்மேல் மங்கை
என்றும் உறையும் திருமணி மார்பா
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாயே
நான் உன்னை அழைத்தேன் காத்தருள்வாயே ... ( ஹே கோவிந்தா )
சுந்தரராஜன் பாடும் வேங்கடவா
குறைவற்ற செல்வமும் உடல் நலம் வேண்டிலேன்
இனி வரும் காலமும் உன் புகழ் பாடி
உன் திருவடி தன்னில் என்னை இருத்திட ... ( ஹே கோவிந்தா )
Click Here for AUDIO (under construction)