மறவா வரம் கேட்பேன்

 

ராகம்: மத்யமாவதி

மறவா வரம் கேட்பேன் கோவிந்தா

உன்னை மறவா வரம் கேட்பேன்

பரவசத்தோடு பாடும் பாடலில் மனமுவந்து

ஒரு வரம் நீ தந்தால் .. உன்னை மறவா வரம் கேட்பேன்

 

ஒவ்வொரு நாளும் உன் நினைவோடு

என் மனக்கண் முன்பு நீ வர வேண்டும்

களிப்போடு மனம் கவி பாட

தாளத்தோடு கால் ஜதி போட

வாழ்வில் சுகம் வருமோ இடர் வருமோ

எது வந்தாலும் ... உன்னை மறவா வரம் கேட்பேன்

 

எத்தனையோ எண்ணம் அதன் நடுவினிலே

உன் நினைவு என் மனதினுள் வேண்டும்

அந்திம காலம் வந்திடும் வேளையில்

உன் திரு நாமம் மனதில் இருந்திட

மறுபடியும் ஒரு பிறவி நீ தந்தாலும் ..

உன்னை மறவா வரம் கேட்பேன்

 

Click Here for AUDIO (under construction)

Top

Songs Index