நாளை நாளை

 

ராகம்: ரேவதி 

நாளை நாளை என நாள் கடத்தாமல்

இப்போதே திருமலை அடை மனமே  ....  நாள் கடத்தாமல் ..

 

ஒரு முறை திருமலை சென்று வந்தால்

கோவிந்தன் மனதினில் நிறைந்திடுவான்

கலியுக வரதனாம் வேங்கடவன்

பதமலர் பணிந்திட செல் மனமே  ...  (  நாளை )

 

சங்கு சக்ரதர நித்ய மங்களன்

அலர்மேல் மங்கை உறை மணிமார்பன்

அபய கரத்தால் அவன் காட்டிய

திருவடி பணிந்திட செல் மனமே   ...  (  நாளை )

 

Click Here for AUDIO (under construction)

Top

Songs Index