ஒரு கையில் வில்லும்

ராகம்: காபி

ஒரு கையில் வில்லும் மறுபுறம் சீதையும்

சேர்ந்து வந்தாயே ஸ்ரீராமா

பூரண நிலவும் வெட்கி குனியும்

உன் அழகை கண்டால் ஸ்ரீராமா

 

தம்பி பரதனுக்கு அரசுரிமை தந்து

வருடம் பதினான்கு வனம் நடந்தாயே

இலங்கையர் கோமானை போரினில் மாய்த்து

சீதையுடன் சேர்ந்ததை கண்டேனே  ... ( ஒரு கையில் )

 

ராமனாய் அவதரித்து கண்ணனாய் பின் தோன்றி

உலக நலத்தை காத்தாயே

திருமலையில் இன்று அபய கரத்தால் காட்டிய்

திருவடி சரண் அடைந்தேனே  .... ( ஒரு கையில் )

 

Click Here for AUDIO (under construction)

Top

Songs Index