ஒரு முறை உன்னை பார்த்த என் மனம்
ராகம்: ஆபோகி
ஒரு முறை உன்னை பார்த்த என் மனம்
மீண்டும் உன்னை காண ஏங்குதே ... ( ஒரு முறை )
தாயை பிரிந்த சேய் தவிப்பது போல்
உன்னை காணாமல் மனம் ஏங்குதே .... ( ஒரு முறை )
குழந்தையை அன்னை மறப்பதும் தகுமோ
நீயும் என்னை மறப்பதும் முறையோ
உன் திருவடி சரணமென வந்து அடைந்தேன்
வாரியணைத்து என்னை சேர்த்து கொள்ளாயோ
யசோதை மைந்தனே கண்ணனே கோவிந்தா
மீண்டும் உன்னை காண மனம் ஏங்குதே ... ( ஒரு முறை )
Click Here for AUDIO (under construction)