ரகுகுல திலகனே

ராகம்: சுத்த தன்யாசி

ரகுகுல திலகனே சீதை மணாளனே

நான் தினம் வணங்கும் ராமச்சந்த்ரனே  ... ( ரகுகுல )

 

பசுமை நிறைந்த வயல்களின் நடுவே

காற்று புகுந்து ராமா என்றொலிக்க

பறவைகள் வானில் ராகவா என்றழைக்க

திருவெள்ளியங்குடியில் பள்ளி கொண்ட ராமா  ... ( ரகுகுல )

 

ஒளி இழந்த வெள்ளி மீண்டும் ஒளி அடைய

பார்வை இழந்த சுக்ரன் பார்வை கிடைத்திட

அருள் மழை பொழியும் வேங்கடவனை

திருவெள்ளியங்குடியில் சயனத்தில் கண்டேனே  ... ( ரகுகுல )

 

Song rendered by my daughter

Top

Songs Index