சரணம் என்றடைந்தேன்

 

ராகம்: அமிர்தவர்ஷினி

மீனாய்  ஆமையாய் பன்றியாய் நரசிங்க உருவாய்

வாமனனாய் தோன்றி மூவவுலகம் அளந்தாய்

முன்னும் பின்னும் நடுவும் இராமனாய் கண்ணனாய்

உலகம் காத்திட்ட பரம்பொருளை நான் கண்டு கொண்டேன்

வேங்கட மாமலை மேல்

 

சரணம் என்றடைந்தேன் வேங்கடவன் பாதத்தை

அபய கரத்தால் காட்டிய பாதத்தை  ...   ( சரணம் )

 

விண்ணோர்க்ள் வணங்கும் அத்திருப்பாதத்தை

அகலிகை சாபத்தை போக்கிய பாதத்தை

அரசு முடி துறந்து வனம் சென்ற பாதத்தை

அரக்கர் வழித்தோன்றல் சேவித்த பாதத்தை   ....   ( சரணம் )

 

காளிங்க நர்த்தனம் செய்த பாதத்தை

பாண்டவர்க்கு தூது நடந்த பாதத்தை

பார்த்தனுக்கு காட்டிய அத்திருப்பாதத்தை

மண்ணோர்களை உய்விக்கும அத்திருபபாதத்தை   ...  ( சரணம் )

 

Song rendered by my Wife & Daughter

Top

Songs Index