தூது சென்றிடு கிளியே
ராகம்: திலங்
தூது சென்றிடு கிளியே ... கிளியே
தூது சென்றிடு கிளியே
வேங்கட மாமலை சென்று அங்கு
வேங்கடவாணனிடம் என் காதலை சொல் கிளியே .... ( தூது )
அவனை பிரிந்து நான் எத்தனை நாள் கடவேன்
கைத்தலம் பற்றிட விரைந்து வரச்சொல் கிளியே .... ( தூது )
பேதை நான் பெண் என்பதை மறந்தேன்
நாணத்தை துறந்து உன்னை தூது சொல்ல பணிந்தேன் ... ( தூது )
Click Here for AUDIO (under construction)