உன்னை காண கண் கோடி வேண்டுமே

ராகம்: ஆனந்தபைரவி

உன்னைக் காண கண் கோடி வேண்டுமே

ஆனந்த நிலய வாசா ஸ்ரீனிவாசா   ....  ( உன்னை )

 

பாரெல்லாம் புகழும் உத்தமனே உன்னை

நாடி வரும் பக்தர்க்கு முக்தி தரும்   ... ( உன்னை )

 

உன் நெற்றியின் நாமம் என்னை கவர்ந்திழுக்க

உன் திருமுக மண்டலமோ என்ன களிப்பினில் ஆழ்த்த

பவளத்திருவாயில் புன்சிரிப்போடு நின்ற

கோலத்தில் உன்னை கண்டிட எனக்கு  .... ( காண கண் )

 

மூன்றடி நிலம் கேட்டு மூவுலகம் அளந்தாய்

அரக்கர் குலம் அழிக்க இராமனாய் பிறந்தாய்

தருமம் நிலைத்திட கண்ணனாய் அவதாரம் கொண்டாய்

கலியுக வரதா வேங்கடவாணனே  .... ( உன்னை )

 

Click Here for AUDIO (under construction)

Top

Songs Index