வைகுந்தம் என்றால் என்ன

 

ராகம்: த்ர்பார்

வைகுந்தம் என்றால் என்ன திருவேங்கடம் என்றால் என்ன

ஸ்ரீனிவாசன் தர்பார் இடத்தை என்ன சொல்லி அழைத்தால் என்ன  ...  ( வைகுந்தம் )

 

பிறவி பெருங்கடல் கடந்திட எண்ணி நான்

திருமலை அடைந்தேன் உன் திருவடி பணிய

உன் திருமேனி அழகில் மயங்கிய அடியேன்

உன்னை தினமும் சேவித்தால் வேறேதும் வேண்டேன்   ....   ( வைகுந்தம் )

 

பாவங்கள் தீர்த்து பரமனடி சேர்க்கும்

நாரயணா என்னும் திருமந்திரமே

நாரயணனே வசிக்கும் மலையே

திருமலையே அது வைகுந்தமே  ...  ( வைகுந்தம் )

 

Click Here for AUDIO (under construction)

Top

Songs Index