வசந்தோற்சவம் கண்டருள்வான்
ராகம்: வசந்தோற்சவம்
வசந்தோற்சவம் கண்டருள்வான் திருவேங்கடவன்
ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தந்தருள்வான் .... ( வசந்தோற்சவம் )
தினம்தோறும் வசந்தமா எனக் கேட்டால்
ஒவ்வொரு நொடியும் வசந்தமே என்றருள்வான் ... ( வசந்தோற்சவம் )
திருவரங்கத்தில் பள்ளி கொள்ளும் முன்னால்
திருமலையில் தன் கால் பதித்தான்
அலை மோதும் பக்தர்க்கு அபயகரத்தாலே
தினம்தோறும் வசந்தமே என அருள ... ( வசந்தோற்சவம் )
Click Here for AUDIO (under construction)