வேங்கடவா கண் மலராய்

 

ராகம்: பூபாளம்

கௌசல்யா சுப்ரஜாராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நரசார்தூல கர்தவ்யம் தைவமாஹ்னிகம்

 

வேங்கடவா கண் மலராய்

எழில்சூழ் வேங்கடவனே கண் மலராய்

 

பொழுது புலர்ந்து சூரியனும் கிளம்பி விட்டான்

பறவைகள் அரி அரி என சப்தம் எழுப்பிட

கோசலை குமாரா இராமச்சந்திரனே

நீயும் துயில் விடுத்து அடியார்க்கு அருள் புரிய  ... ( வேங்கடவா )

 

இந்திராதி தேவர்கள் உன் கோவிலில் நிற்க

தூய அந்தணர்கள் உன் திருநாமம் சொல்லிட

நானிலம் காத்திட நான்மறைகள் தழைத்தோங்கிட

உன்னடியார்க்கு அடியன் என அடியேனை ஆட்படுத்த  ... ( வேங்கடவா )

 

Click Here for AUDIO  (under construction)

Top

Songs Index