வேங்கடவனுக்கு திருமஞ்சனம்
ராகம்: மத்யமாவதி (அல்லது) பிருந்தாவன சாரங்கா
வேங்கடவனுக்கு திருமஞ்சனம்
ஸ்ரீனிவாசனுக்கு திருமஞ்சனம் ... ( வேங்கடவனுக்கு )
கோகுலத்தில் வளர்ந்த கோவிந்தனுக்கு
கோ பாலால் திருமஞ்சனம்
முப்பது முக்கோடி தேவர் கண்டு களித்திட
தேவாதி ராஜனுக்கு திருமஞ்சனம் ... ( வேங்கடவனுக்கு )
புனித நீரெல்லாம் திறண்டு உருவெடுத்த
ஆகாய கங்கையால் திருமஞ்சனம்
வாசனாதி பொருட்கள் கலந்த நீரால்
திருமலையானுக்கு திருமஞ்சனம்
திருமலைக்கு இன்றே சென்றிடுவீர்
அபூர்வ காட்சியை கண்டு அருள் பெற
வேங்கடவனுக்கு திருமஞ்சனம்
Click Here AUDIO (under construction)