யதுநந்தன மதுசூதன

ராகம்: நாட்டை

யதுநந்தன மதுசூதன வாசுதேவா லோகரக்ஷகா

தேவகி நந்தன கோகுல பாலா மதுராபுரி நகர் நாயகா .... ( யது )

 

மலையை குடையாய் எடுத்தவனே

காளிங்க நர்த்தனம் புரிந்தவனே

தீயனாம் கம்சனை மாய்த்தவனே

பூமியை காத்திட வந்தவனே கண்ணா    .... ( யது )

 

பார்த்தனுக்கு தேரோட்டி சாரதியானாய்

அறநெறி வாழ்விற்கு கீதையை தந்தாய்

உலகினில் நன்மை என்றும் விளங்கிட

திருவேங்கடம் நின்று நாளும் அருள் செய்யும்  ...  ( யது )

 

Click Here for AUDIO (under construction)

Top

Songs Index