காணும் பொங்கல்
(by ஆதித்யா)

சென்னனையோட சேர்ந்ததுதான். இருந்தாலும் அந்த இடம் என்னவோ ஒரு தனி உலகம் மாதிரி. அடிப்படை வசதி என்று பார்த்தால் போனால் போகட்டும் என்று ஐந்து கைப்பம்புகள் அந்த ஐந்து சந்துகள் இருக்கும் இடத்திற்கு. அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை வோட்டு கேட்டு வருவதோடு சரி. அதன் பின் அவர்கள் ஒரு எண் கணிக்கை.

ஓட்டையும் உடசலுமா ஓடு மற்றும் கூறை வீடுகள். சிலர் அந்த ஓடுகளின் மேல் எப்போதோ யாரோ தூக்கி எறிந்த தார்பானை பரப்பி இருந்தார்கள். சிலர் தென்னை ஓலயை பரப்பி இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு வீட்டில் தான் …

அந்த ”காலனியில்” உள்ள எல்லோரும் வருடத்தில் வரும் அந்த ஒரு நாளுக்காக காத்திருந்தார்கள் - காணும் பொங்கல். வருடத்தில் ஒரு நாள் ஒரே ஒரு நாள் கட்டிடத் தொழிலுக்கோ, கூலி வேலைக்கோ போகாமல் அல்லது ஏதாவுது வீட்டில் வேலையோ செய்யாமல், குடும்பத்தோடு வெளியே போவது. அந்த ஒரு இன்பத்திற்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை பெண்கள் சேர்த்து வைத்திருந்தார்கள். அதுவும் தங்கள் புருஷனுக்கு தெரியாமல் (தெரிந்தால், அதுவும் ”தண்ணியா” கரைந்திருக்கும்).

இதோ, அந்த வீட்டில் எல்லோரும் கலர் கலரா ட்ரெஸ் பண்ணியிருந்தார்கள், ஒரே ஒரு பெண்ணை தவிர. யார் அந்த பெண்? ஒரு சின்ன பிண்ணனி ..

வீட்டில் தலைவன் பெயர் ராசா, தலைவி வேலாத்தா. ராசாவுக்கு ரெண்டாம் தாரம். ராசாவுக்கு பொறந்த முதல் குழந்தை தான் அந்த பெண், பெயர் ராணி. ராணி ரெண்டு மாசம் தான் தாய்ப்பால் குடித்தாள். பிறகு என்ன, எல்லாரும் சொல்ல, ராசா வேலாத்தாவை ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிண்டான். குழந்தையை தனியா விட்டுட்டு வேலைக்கு போகமுடியுமா?

அப்புறம் அவர்களுக்கு பிறந்தது மூணு பொண்ணுங்க ரெண்டு பசங்க. வர வருமானத்த வச்சு எத்தன பேர் சாப்பிட முடியும்? வேலாத்தாவுக்கு ராணி மேல கொஞ்ச கொஞ்சமா …

மீண்டும் கதைக்கு வருவோம். பாக்கி எல்லாரும் அழகா ட்ரெஸ் பண்ணியிருக்க, ராணி மட்டும் தன்னுடைய எப்போதோ வாங்கின ஒரு அழுக்கு சட்டையும் பாவாடையும் போட்டுண்டு ஆசையா தயாரா இருந்தாள் மெரினா பீச் போறதுக்கு.

மேலாத்தா மனசுக்குள்ளே சொல்லிண்டா சாமான் எல்லாம் தூக்கறதுக்கு ஆள் வேண்டாமா?
16.01.2014

Top

Tamil Stories Index

Sundaram Home Page

My Blogs