”சார், நீங்கள் ராஜன் சார் தானே வைஷ்ணவ் கல்லூரி கணக்கு ப்ரொஃபெஸ்ஸர் ...” “ஆமாம் நான் ராஜன் தான். நீ யாரு?”
நான் பண்ணிய கலாட்டாக்காக. எப்போதும் உதவாக்கரைன்னு என்னை கூப்பிடுவீங்களே, சார். அந்த குமார் தான் சார் நான்.”
அவருக்கு நம்பவே முடியவே இல்லை. பொறுக்கி மாதிரி எப்போதும் சக மாணவர்களோடு அரட்டை அடிச்சுண்டோ பேப்ப்ர் பந்தை எறிஞ்சுண்டு இல்லேனா பாதி நாள் க்லாசுக்கே வராம கட் பண்ணிண்டு இருந்தவனா இவன். நெற்றியில் பட்டையா விபூதி, நடுவில அழகா வட்டமா குங்கும பொட்டும், பஞ்சகச்சம் அங்கவஸ்த்ரம் அணிந்து, ம்ஹும், இருக்காது என்று அவர் எண்ணினார்.
அந்த எண்ணத்தை தெரிந்தது போல, சார் சத்தியமா சொல்லறேன் நான் குமார் தான். என்னோட அப்பாவை கூட உங்களுக்கு தெரியும். பேர் சுப்பிரமணியன். இந்த கிழக்கு மாட வீதியிலே தான் எங்க வீடு இருக்கு.
ராஜனுக்கு ஏதோ கொஞ்சம் நினைவுக்கு வந்தா மாதிரி இருந்தது இப்போ. “ஏண்டா படவா, உன்னோட அப்பா குடுமி வச்செண்டு வாய் நெறய வெத்தலை கும்பகோணம் புகையிலை போட்டிருப்பாரே, அவரா?” “ஆமாம் சார், அவரே தான்.” நான் கூட உங்காத்துக்கு வந்திருக்கேன். உன் அப்பா தான் ரொம்ப அலுத்துண்டா உன்னோட போக்க பாத்து. ஆனா இப்போ ஆளே மாறிட்டே போலிருக்கே, ரொம்ப ஆச்சரியமா இருக்கு.ஒரு பத்து பதினந்து வருஷம் இருக்குமா நீ படிச்சு?” அவர் அடுக்கிண்டே போனார்.
“அப்பா இப்போ எப்படி இருக்கா?” ஒரு நிமிஷம் குமார் கண்ணீரை அடக்கிண்டு “அவர் போய் பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு, சார். அதுக்கு பிறகு தான் கொஞச கொஞ்சமா நான் மாறி மனுஷன் ஆனேன். அம்மாவும் இல்லை, அப்பாவும் போய்ட்டா. ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணினேன். ஒரு நாள் சாயந்திரம் ஏதோ கோயிலுக்கு போணும் போல தோணிச்சு. அப்போ தான ்ஞானம் வந்தது. மாதா பிதா குரு தெய்வம் என்று மனசில விழுந்ததுமே நான் காலேஜ் நாள்ளே உங்களையெல்லாம் படுத்தினது ஞாபகம் வந்தது.உங்க கிட்டு வந்து மன்னிப்பு கேக்கலாம்னு யோசிச்சா எனக்கு உங்க அட்ரெஸ் தெரியல. மானசீகமா என் தப்பை எல்லாம் மன்னிச்சுடுங்கள் என வேண்டினேன். இப்போ உங்கள நேரிலேயே பாக்கியம் கிடச்சிருச்சுன்னு சொல்லிட்டு அப்படியே சாஷ்டாங்கமா அவர் கால்ல விழுந்தான்.
“டேய் குமார் எழுந்திடுடா. உன்ன அப்போ திட்டினாலும் எல்லாம் உன்னோட நல்லதுக்குத்தான். என் மனசுல எந்த ஒரு விகல்பமும் இல்லடா.”
“சார் ரொம்ப சந்தோஷம். நான் இப்போ ஒரு வெளி நாட்டு கம்பெனில பெரிய வேலைல இருக்கேன். எல்லாம் உங்க ஆசீர்வாதம்.
வாங்க கற்பகம் மெஸ் போய் காபி சாப்பிண்டே பேசலாம். சார் அந்த பையை என் கிட்ட கொடுங்க, நீங்க எதுக்கு தூக்கணும். சொல்லிண்டே பையை எடுத்துண்டான்.
போலாமா சார்னு கேட்டுண்டே வேக வேகமா நடக்க ஆரம்பிச்சான். பாவம் பெரியவருக்கு அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. சிறிது நேரத்திலேயே அந்த கபாலீஸ்வர கோயிகிகு் வந்த கூட்டத்தில் மாயமா மறைந்தான்.
18.01.2014